Showing posts with label சபரிமலை யாத்திரை. Show all posts
Showing posts with label சபரிமலை யாத்திரை. Show all posts

Friday, July 23, 2010

சபரி மலை யாத்திரை 2010

சாஸ்தாவின் அருளால் எனக்கு பிரான்சில் மேல் படிப்புக்கான வாய்ப்பு கிட்டியது. எனக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு எனது கல்லூரியில் இருந்து உத்தரவு வந்தது. அதன் படி நான் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளேன். இதற்கிடையே சபரிமலை சென்று அயப்பண்ணை தரிசிக்க வேண்டும் என்று ஒரு அவா. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று ரயிலில் நானும் எனது தந்தையும் புறப்பட்டு சென்றோம். அடுத்த நாள் காலை ஒன்பது மணி அளவில் செங்கனூர் என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து ஒன்றில் பயணம் செய்து மாலை ஒரு மணி அளவில் பம்பையை வந்து அடைந்தோம். கேரளாவை கடவுள் இருப்பிடம் என்று ஏன் கூறுகிறார்கள் என்று எனக்கு அணிக்கு தான் விளங்கியது. மனித நடமாட்டம் வெகு கம்மியாய் இருந்ததால் இயற்கை அன்னையை மாசு இல்லாமல் காண முடிந்தது. "சாஸ்தாவின் நந்தவனம் இவளவு அழகா?" என்று பிரம்மித்து போனேன். அன்று மாலையே தரிசனத்தை முடித்து விட்டு அடுத்த நாள் சனிகிழமை காலை மூன்று மணி அளவில் நெய் அபிஷேகத்திற்காக சன்னிதானத்தை அடைந்தோம். எல்லாம் இனிதே முடித்து விட்டு கிளம்பும் முன் ஒரு தடவை நன்றாக தரிசனமும் செய்து விட்டு நீலி மலையை இறங்க துவங்கினோம். இது எனக்கு ஒன்பதாவது மலை என்பதும், எனது தந்தையாருக்கு இருபத்து ஐந்தாவது மலை என்பதும் குறிப்பிட தக்கது. இதுவே இரவரும் சிறிய பாதை வழியாக செல்வது முதன் முறை ஆகும். இந்த ஆண்டு மண்டலத்தின் போது நான் இந்தியாவில் இருக்க முடியாது என்பதனால் இம்முறை யாத்திரையை முன்னால் செய்து விட்டோம்.

மாசு இல்லாத சூழல் கூட்டம் இல்லாத தரிசனம் இது இரண்டும் மாத பூஜை சமயத்தில் மட்டுமே கிடைக்கும்.

சபரிமலை, மாத பூஜையில் தான் தரிசனத்துக்கு சிறந்தது என்பதை நான் உணர்ந்தேன் :-) அடுத்த பெருவழி யாத்திரைக்கு முன்னோக்கி வேண்டி உள்ளேன். இறைவன் அருள் இருக்கையில் எதுவும் சாத்தியமே!

இறைவன் நம்மை காப்பாராக!
சுவாமியே சரணம் ஐயப்பா!