Monday, April 20, 2015

தியரி ஒப் ரிலேட்டிவிட்டி - One of my post in 2008 December

வாழ்கையில் சில விஷயங்களை நினைத்தால் எனக்கு விசித்திரமாக இருக்கும்.

முக்கியமா சொலனும்ன நேரம் போறதுக்காக வெயிட் பண்றது

உதாரணம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனாய் இருந்த போது பப்ளிக் தேர்வு எப்போ டா வரும்னு இருக்கும்.ஏன்னு கேடிங்கனா அப்போ தான் லீவ் ல நல்லா என்ஜாய் பண்ணலாம். தேர்வு ஆரம்பிகர்த்துக்கு முன்னால நிறைய நாள் விடுமுறை இருக்கும். அப்போதெல்லாம் லீவ் ல என பண்ணலாம்னு மட்டும் தான் யோசனை இருக்கும்.

தேர்வு நாள் நாளைக்கு நெருங்கிடும் அப்போ தான் தோணும் அய்யோ இருந்த நேரத்தை எல்லாம் வீண் அடசிடோமே னு :-)

தேர்வை முடிஞ்ச வரை நல்லா எழுதி முடிச்ச உடனே தான் கொஞ்சம் நிம்மதி  கிடைக்கும். ஆனாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன பீலிங் " நம்ப நல்லா படிச்சி இருந்து இருக்கலாம்னு '.

அதே மாறி இன்னொரு இன்சிடென்ட்

என் நண்பர் ஒருவர் வெகு நாட்களாய் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் என்னுடன் படித்தவள் தான். சோ எனக்கு அவாள்ள நல்லா தெரியும். கடும் எதிர்ப்புக்கு பின்பு அவங்க கல்யாணம் நல்லா நடந்தது. ஆனா நாலு வருஷம் காத்திருந்தவங்க கடைசி நாலு மாசத்துல நாள் எப்போ டா போகும்னு எண்ணிக்கிட்டு இருந்தாங்க :-)

நாலு வருஷம் வேகமா போன அவங்களுக்கு அந்த நாலு மாசம் சீகரமா போகலையாம் :-(

கல்யாணத்துக்கு முன்னால பீலிங் வேற :"நாங்க லைப்ல  என்ஜாய் பண்ணவே இல ஸ்ரீ" - அப்டின்னு என் கிட்ட வந்து போலம்ப்பல் !!!!அட பாவிகளா நீஙக எல்லாம் எப்போ தான் திருந்த போறீங்களோ :-)

இனும் ஒரு உதரணம்
எனக்கு வெளி நாட்டில் வேலை செய்ய வாய்ப் பு கிடைத்தது. நாட்டை விட்டு வெளி ஏறும் போது எனக்கு மிகவும் கவலை ஆக இருந்தது. சில மாதங்கள்  ஓடின. சற்று முன் கிடைத்த தகவல் படி நான் இன்னும்  நாலு நாட்களில் தாய் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவு. எனக்கு அதில் கொஞ்சம் மகழிழ்ச்சி தான். இருந்தாலும் இங்க கொஞ்ச நாள் இருந்து வாழ்கைய அனுபவிச்சி இருக்கலாமோன்னு ஒரு சின்ன வருத்தம். சரி விஷத்துக்கு வருவோம்!!! இங்க இத்தனை மாசம் சீகரமா போன மாதிரி இருந்தது. எல்லா வீகேண்ட்ஸ் நொடில முடிஞ்சா மாறி இருந்தது.

இது தான் எனக்கு இந்த நாட்டில் இருகர கடைசி வீக் எண்டு . ஆனா எனக்கு இப்போ  நேரம் கொஞ்சம் கூட போகலனு தோனுது.

இந்த பதிப்ப போடறதுக்கு காரணம் என்னனு கேட்டின்கன்னா நாம்ப எல்லாரும் வாழ்கைல கஷ்ஷ்டம் படும்  போது அந்த கஷ்ஷ்டம் எப்போ டா முடியும்னு இருக்கும் ஆனா முடிய போகுதுன்னு தெரிஞ்ச நமக்கு இனொரு பீலிங் வரும். அது என்னன்னா இந்த கஷ்ச்ததுல நாம்ப இப்படி டீல் பண்ணி இருக்கலாம்னு தோணும் :-)
இது தான் மனித இயல்பு.

இத பத்திப்ப போட்ற நான் திருந்துவேனா? இதுக்கு காலம் பதில் சொல்லும் :-) 
என டா இவன் மஹாபாரத சீரியல்ல வர கால சக்கரம் மாதிரி பேசறானே னு என்ன கோச்சிகாதீங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே!

கடவுள் நம் அனைவரையும் காப்பாராக!!

மேல் கூறிய கருத்துக்கள் எனது சிந்தனை மட்டுமே 

Monday, April 6, 2015

Running out of Gas or Luck?

This is what exactly I am thinking right now. Not sure where I am going. Feeling lonely even when every one is around. Suddenly the City gives me a look of a desert. Hoping things will be alright soon.