I realized it when I went to bed. It was the favorite bed time stories narrated by my dad. Yes, he still narrates some spiritual stories and yesterday was his day as he narrated a story of a Panduranga bhaktan Eknaath and his guru seva:
Here goes the story: excuses for the tamil font.
ஏகநாத் என்ற ஒருவர் பாட சாலையில் சேர்ந்தார். அவர் ஒரு அபார குரு பக்தர். மற்ற சீடர்கள் பாடம் படிக்கும் சமயத்தில் இவர் குருவிற்கு தேவையான பனி விடைகள் மட்டுமே செய்வாராம். எல்லா பாடமும் அவருக்கு தானே அத்து பிடி ஆகிவிடுமாம். குரு தேவருக்கே இதை கண்டு கடும் வியப்பு. ஏக்நாத் அவர்களின் குரு சேவையை பார்த்து மனமும் மெய்யும் சிலிர்த்து, ததாத்றேயரிடம் சென்று ஏகனாதருக்கு காட்சி கொடுக்கு மாறு வேண்டி கொண்டார் ! குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி தத்தாத்ரேயர் குருவிடம் ஏகனாதருக்கு ஆத்தங்கரையில் காட்சி தர ஒப்புக் கொண்டார். அடுத்த நாள் குருவின் கட்டளைக்கு இணங்கி ஏகநாதர் தண்ணீர் எடுக்க ஆதங்கரைகுச் சென்றார். வரும் வழியில் தத்தாத்ரேயர் காட்சி தந்தார். அவரை பார்த்தும் பார்க்காமல் சென்று கொண்டு இருந்தார் நம் ஏகநாதர். இதை பார்த்து வியந்த தத்தாத்ரேயர் அடுத்த முறை அவருக்கு முன்னால் வந்து நின்றார். அப்பொழுதும் கூட அவரை கண்டும் காணாதது போல் சென்றார் ஏகநாதர். இதை பார்த்து மறு படியும் வியந்து போன தத்தாத்ரேயர், அவரை அழைத்து, தன்னை அறிமுக படுத்தி கொண்டார். ஏகநாதர் அவரை வணங்கி விட்டு "மிக்க மகிழ்ச்சி, நான் எனது குருவிற்கு சேவை செய்து கொண்டு இருகின்றேன், செல்ல வேண்டி இருக்கறது" என்று சொல்லி குரு தேவர் வீட்டிற்குச் சென்றார். திரும்பி வந்த சீடனை பார்த்த குரு தேவர் ஆசிர்யதொடு வரும் வழியில் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டார். அதற்கு ஏகநாதர், குரு தான் முதல் கடவுள் என்று பதில் அழித்தார். குரு தான் எல்லாருக்கும் முதல் கடவுள் என்பதை இந்த கதையின் மூலம் நம்மால் நன்றாக உணர முடிகிறது.
After the story I had a nice peaceful sleep.
Who else will get a bed time story like this from your dad? :-) I am blessed to have these people around me!
Swamy Saranam!